உள்ளூராட்சி சபைகளில் ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒருபோதும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அப்படி எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் தாங்கள் வரபோவதில்லை எனவும் சி.சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் குறித்த விடையம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே சி.சிறீதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பெறாத சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பியின் ஆதரவை பெற்று ஆட்சியமைப்பதற்கு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஈ.பி.டி.பிக்கும் கூட்டமைப்புக்கும் எட்டாப்பொருத்தம் என தெரிவித்த சி.சிறீதரன் டக்ளசுடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்ற கதைக்கே இடமில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்களுடைய கொள்கை வேறு எனவும் கூட்டமைப்பின் கொள்கை வேறு எனவும் சி.சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை வலுவாக ஆதரிக்கும் தமது கட்சி. ஈ.பி.டி.பியுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு ஒருபோதுமே வாய்ப்பில்லை எனவும் சி.சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவ்வாறு வெளியான செய்திகளில் உண்மையில்லை இல்லை எனவும் சி.சிறீதரன் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.